உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி

மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி

செஞ்சி: வீட்டில் மின் ஒயர்களை பழுது பார்த்த நரிக்குறவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். செஞ்சி அடுத்த களையூர் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் காந்தி மகன் ஏழுமலை 28; நரிக்குறவர். இவர் நேற்று காலை 12 மணியளவில் தனது வீட்டில் மின் ஒயர்களை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி