செஞ்சியில் விநாயகர் சதுர்த்தி
செஞ்சி: செஞ்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். செஞ்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் பொது மக்கள் சார்பிலும், இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் புதிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் 3 முதல் 21 அடிவரையிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். அந்தந்த பகுதிகளிலும், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.