உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் வீடு எரிந்து சேதம்

விக்கிரவாண்டியில் வீடு எரிந்து சேதம்

விக்கிரவாண்டி,: விக்கிரவாண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.விக்கிரவாண்டி வாணியர் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 55; கூலித் தொழிலாளி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கிருஷ்ணன் தனது மனைவி செல்வி மற்றும் மகள் அனிதா, மருமகன் செந்தில் ஆகியோர் வீட்டினுள் இருக்கும் போது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்தது. தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.விபத்தில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியது .தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை