உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு மனை தகராறு: 2 பேர் மீது வழக்கு

வீட்டு மனை தகராறு: 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டுமனை பிரச்னை தொடர்பாக தம்பியைத் தாக்கிய அண்ணன் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி, 54; இவரது அண்ணன் புண்ணியமூர்த்தி, 56; விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்கள், அருகருகே வசித்து வருகின்றனர்.இவர்களுக்குள், பூர்விக வீட்டு மனை இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது.கடந்த 6ம் தேதி இரவு, கருணாமூர்த்தி தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டு, பொதுவாக திட்டிக்கொண்டிருந்தார். அப்போது, தங்களைத்தான் திட்டுவதாக நினைத்து, புண்ணியமூர்த்தியும், அவரது மகன் அருள்மொழிவர்மன், 30; ஆகியோர், கருணாமூர்த்தியை திட்டி, தாக்கினர்.இது குறித்த புகாரின் பேரில், புண்ணியமூர்த்தி மீது வளவனுார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ