உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைப்பு

கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைப்பு

அவலுார்பேட்டை : மேல்மைலையனுாரில் கால்நடைகளுக்கான 3 மருத்துவ சேவை வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் கால்நடைகளுக்கான 3 மருத்துவ சேவை வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் அழகுவேல், ஒன்றிய சேர்மன் கண்மணி முன்னிலை வகித்தனர். திண்டிவனம் உதவி இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான், கால்நடைகளுக்கான 3 மருத்துவ சேவை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த வாகனங்கள் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும்.நிகழ்ச்சியில், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், விழுப்புரம் கால்நடை துறை உதவி இயக்குனர் மோகன், தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை