உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்தியன் வங்கி கிளை இடமாற்றம்

இந்தியன் வங்கி கிளை இடமாற்றம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் இந்தியன் வங்கி கிளையை புதிய கட்டடத்தில் அமைச்சர் துவக்கி வைத்தார்.அவலுார்பேட்டையில் கீழ் பென்னாத்துார் சாலையில் செயல்பட்ட இந்தியன் வங்கி , மங்கலம் சாலையில் இட மாற்றம் செய்யப்பட்டு, மங்கலம் சாலையில் புதிய கட்டடத்தில் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு சென்னை இந்தியன் வங்கி கள பொது மேலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் குத்து விளக்கேற்றி வங்கி கட்டடத்தை துவக்கி, 59.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.ஒன்றிய சேர்மன் கண்மணி, துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகினர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் , வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.கிளை மேலாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி