உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சர்வதேச மகளிர் தினம்

 சர்வதேச மகளிர் தினம்

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் சேட்டு, கனகசபாபதி, சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர். பேராசிரியை கலைச்செல்வி வரவேற்றார்.நகராட்சி ஆணையர் வசந்தி தங்கப்பன் பெண்களின் உரிமை தன்னம்பிக்கையை போற்றும் விதமாக இருக்க வேண்டுமென என்று பேசினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியை தேவி, தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் பாரதி, தாவரவியல் துறை தலைவர் தனம் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியை தாவரவியல் இணை பேராசிரியர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அலுவலக கண்காணிப்பாளர் பிரேமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை