உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்

கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் கே.கே., ரோடு பார்த்தசாரதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஜெயா, 43; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஓசைமணி, 40.இவர், ஆட்டோ வாங்குவதற்க்காக, ஜெயாவிடமிருந்து 3 சவரன் நகையை கடனாக வாங்கி அடகு வைத்துள்ளார்.அதனை, கடந்த மாதம் 9ம் தேதி ஜெயா திருப்பி தருமாறு கேட்டதற்கு, ஓசைமணி திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், நேற்று ஓசைமணி மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை