மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா வழங்க கோரி ஊசிமணி மாலையுடன் மனு
18-Feb-2025
மயிலம்: மயிலம் அடுத்த தீவனூர் ஊராட்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன் வரவேற்றார்.விழாவில், மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகள் 15 பேருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், கலை இலக்கிய அணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர் கட்சி நிர்வாகிகள் சேகர், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Feb-2025