கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்
மயிலம்:மயிலத்தில் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மயிலம் சேர்மன் யோகேஸ்வரி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ராமதாஸ் வரவேற்றார்.நிகழ்ச்சியில், மயிலம் ஒன்றிய பகுதிகளில் கூரை வீட்டில் வசிக்கும் பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் 79 பேருக்கு 2 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில் இரண்டாம் கட்டமாக பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் நிவேதா, விவசாய அணி பாஸ்கர், மயிலம் ஒன்றிய பொறியாளர் அப்துல் ரஹீம் உட்பட பலர் பங்கேற்றனர்.