மேலும் செய்திகள்
பதக்கம் வென்ற வீரருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
21-Oct-2024
விக்கிரவாண்டி; ஆசியா சேம்பியன் ஷிப் போட்டியில் பென்காக் சிலாட் விளையாட்டில் வெண்கலம் வென்ற வீரருக்கு பாராட்டு நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனவேல். கல்லுாரி மாணவர்.இவர் இந்திய அணி சார்பில் உஸ்பெகிஸ்தானில் நடந்த 8 வது ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் பென்காக் சிலாட் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார்.விளையாட்டு வீரர் மோகனவேல் அமைச்சர் பொன்முடி, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், துணைச் செயலாளர் இளந்திரையன், விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் மணி, பென்காக் சிலாட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, ஒன்றிய கவுன்சிலர் அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Oct-2024