உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி கோட்டைக்கு வரும் யுனெஸ்கோ குழுவிற்கு சிறப்புகளை விளக்கிட அதிகாரிகள் தேவை

செஞ்சி கோட்டைக்கு வரும் யுனெஸ்கோ குழுவிற்கு சிறப்புகளை விளக்கிட அதிகாரிகள் தேவை

செஞ்சி கோட்டையை ஆய்வு செய்ய வரும் யுனெஸ்கோ குழுவினருக்கு செஞ்சி கோட்டை குறித்து விளக்கி சொல்வதற்கு இங்கு பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகளை வரவழைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க மத்திய அரசு யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு இம்மாதம் 27 ம் தேதி செஞ்சி கோட்டைக்கு வர உள்ளனர். அடுத்த சில நாட்களில் யுனெஸ்கோ தேர்வு குழுவினரும் செஞ்சி கோட்டைக்கு வர உள்ளனர். அப்போது ஆய்வுக்கு வரும் குழுவினருக்கு செஞ்சி கோட்டை குறித்து தெளிவாக ஆங்கிலத்தில் விளக்கி சொல்வதற்கு ஏதுவாக இங்கு பல ஆண்டுகள் பராமரிப்பு அலுவலர்களாக பணி புரிந்து அனுபவமும், வரலாற்று தகவல்களும் தெரிந்த ஓய்வு பெற்ற பராமரிப்பு அலுவலர்கள், மாற்று இடங்களில் பராமரிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.இந்த அதிகாரிகள் செஞ்சி கோட்டையை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருப்பதுடன், யுனெஸ்கோ குழுவினர் கேட்கும் வரலாற்று பூர்வமான சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மத்திய அரசின் குழுவினர் வரும் போதும் யுனெஸ்கோ குழுவினர் வரும் போதும் செஞ்சி கோட்டையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற, மாற்று இடங்களில் பணிபுரியும் பராமரிப்பு அலுவர்களை வர வழைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ