மேலும் செய்திகள்
வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்
02-Sep-2024
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் பகுதியில் 63.19 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். அன்னமங்கலத்தில் நாடகமேடை, தேவனுாரில் ரேஷன் கடை, சமையறை கூடம், சித்தேரியில் ஊராட்சி அலுவலகம் என 63.19 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து பேசினார்.தொடர்ந்து செவலபுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.பி.டி.ஓ.,கள் சிவசண்முகம், சையத் முகமது , ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
02-Sep-2024