உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி

விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி

வானுார்: வானுார் தாலுகாவில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பூத்துறை அரபிந்தோ ஆசிரம இயற்கை பண்ணையில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் தலைமை தாங்கினார். ஆசிரம பண்ணை நிர்வாகி பிரதீப்லால் பயிற்சி அளித்தார். பயிற்சியில், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கரும்பு, மணிலா பயிர்களை விவசாயிகள் பார்வையிட்டனர். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டி மற்றும் மண்புழு உரம் தயாரித்தலை விவசாயிகள் பார்வையிட்டனர். 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பஞ்சநாதன், ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, சந்திரசேகர் மற்றும் ஆசிரம பண்ணை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ