மேலும் செய்திகள்
டி.வி.,நல்லுாரில் ஒன்றிய குழு கூட்டம்
15-Aug-2024
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நாடகமேடை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி தலைவர் கவுரி ஆகியோர் வரவேற்றனர்.மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், உறுப்பினர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், துணை சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், சிறப்பு விருந்தினர் அமைச்சர் பொன்முடி, 46 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் நாடக மேடையை திறந்து வைத்து பேசினார்.தாசில்தார் ராஜ்குமார், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், ரவி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Aug-2024