உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம், திண்டிவனத்தில் மக்கள் நீதிமன்றம்

விழுப்புரம், திண்டிவனத்தில் மக்கள் நீதிமன்றம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி பேசினார்.நிகழ்ச்சியில், மகளிர் நீதிமன்ற நீதிபதி இளவரசன், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் வாழ்த்திப் பேசினர்.கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் மற்றும் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். லோக் அதாலத்தில், 2,436 வழக்குகளில் 20 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 248 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி நன்றி கூறினார்.

திண்டிவனம்

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மெகா லோக் அதாலத்திற்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது பாரூக் தலைமை தாங்கினார். வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் முதன்மை சார்பு நீதிபதி செல்வி அனுஷா வரவேற்றார்.அட்வகேட் அசோசியேஷன் விஜயன் , வழக்கறிஞர் நலச் சங்க செயலாளர் கிருபாகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா, கூடுதல் சார்பு நீதிபதி செல்வி ஆயிஷா பேகம், மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி அகிலா ஆகியோர் பேசினர். வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.லோக் அதாலத்தில் விபத்து, வங்கி, சிவில், குற்றவியல் வழக்குகள் என 255 வழக்குகளுக்கு, 4 கோடியே 95 லட்சத்து, 34 ஆயிரத்து 76 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி