உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 22,125 பேர் பங்கேற்பு

பிளஸ் 1 பொதுத் தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 22,125 பேர் பங்கேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று பிளஸ் 1 பொதுத் தேர்வை 22 ஆயிரத்து 125 மாணவர்கள் எழுதினர். 310 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்கள், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 47 மையங்கள் என 101 மையங்களில், 193 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 303 மாணவர்கள், 11 ஆயிரத்து 132 மாணவிகள் என 22 ஆயிரத்து 435 பேர் தேர்வு எழுத, ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழ் பாடத்திற்கான தேர்வு நேற்று துவங்கியது. காலை 10:00 மணிக்கு, வினாத்தாள் வழங்கப்பட்டு, 10 நிமிடம் படிக்க அவகாசம் வழங்கி, 10:15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத துவங்கினர். மதியம் 1:15 மணி வரை தேர்வு நடந்தது.கண் பார்வை, உடல் குறைபாடுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தனி தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு சொல்வதை எழுத தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், 14 மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.தேர்வு மைய கண்காணிப்பு பணிகளில் 140 பறக்கும் படையினர் ஈடுபட்டனர். 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், 5 விடைத்தாள் சேகரிப்பு மையங்களிலிருந்து வினா, விடைத்தாள்கள் பாதுகாப்புடன், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மாவட்டத்தில் நேற்று 196 மாணவர்கள், 114 மாணவிகள் என 310 பேர் ஆப்சென்ட் ஆகினர். மீதமுள்ள 22 ஆயிரத்து 125 மாணவர்கள் தேர்வு எழுதினர். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், சி.இ.ஓ., அறிவழகன் ஆகியோர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை