உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமியை திருமணம் செ ய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.விக்கிரவாண்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார். இவர், வளவனுாரில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு செல்லும்போது, வளவனுார் மேட்டுப்பாதை தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் லாரி டிரைவரான மணிகண்டன்,28; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், காதலித்து வந்துள்ளனர். அப்போது மணிகண்டன், அந்த சிறுமியை காரட்டை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்போது, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரிய வந்தது.இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில், மணிகண்டன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !