உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோ வாலிபர் குண்டாசில் கைது

போக்சோ வாலிபர் குண்டாசில் கைது

விழுப்புரம்,; கோட்டக்குப்பம் அருகே போக்சோ வழக்கு வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த சின்னகாட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் முருகவேல், 36; இவர், கடந்த ஜனவரி 30ம் தேதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும், தட்டிக்கேட்ட சிறுமியின் சகோதரிக்கும், சிறுமிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முருகவேலை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் முருகவேலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான நகலை, கடலுார் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை