வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பங்களாதேசிகளை உள்ளே விட்டால் என்னாகும் /
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பது அதிகரித்துள்ளதால், பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயமே தொழிலாக உள்ளது. உடலுழைப்பு அதிகம் உள்ள இம்மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் பலர் சீரழிந்தனர். கள்ளக்குறிச்சியில் 68 பேரும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேரும் இறந்தனர்.இச்சம்பவங்களைத் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், கள்ளச்சாராய விற்பனை பெருமளவு தடுக்கப்பட்ட நிலையில், தற்போது, கஞ்சா புழக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, விழுப்புரம் மாவட்டத்திற்கு திண்டிவனம் வழியாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திருவண்ணாமலை வழியாகவும், தர்மபுரி, சேலம் வழியாக வந்து மர்ம நபர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.சங்கராபுரம் பகுதியில் குறிப்பாக கல்வராயன்மலை அடிவார கிராமங்களான பாச்சேரி, மோட்டாம்பட்டி, தும்பை உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் கள்ளத்தனமாக கஞ்சா பயிரிட்டு அறுவடை செய்து சிறு சிறு பாக்கெட்களில் அடைத்து சங்கராபுரம் மற்றும் வெளியூர்களில் விற்கின்றனர். இதனை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஒரு சிகரெட் 50 ருபாய்க்கு வாங்கி போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.கஞ்சாவை பயன்படுத்துவோர் போதை தலைக்கேறி சுயநினைவை இழந்து, என்ன செய்கிறோம் என தெரியாமல், பெண்களிடம் செயின் பறிப்பு, நடுரோட்டில் தகராறு போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.தங்கள் பிள்ளைகள் இளம் வயதில் போதைக்கு அடிமையாகி வரும் சம்பவம் பல பெற்றோர்களை கவலையடையச் செய்துள்ளது.கஞ்சாவை ஒழிக்க மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டும் இரு மாவட்டங்களிலும் கஞ்சா சப்ளை செய்யும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய முடியவில்லை. இதில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களின் அரவணைப்பிலும், சிலர் போலீசாரின் பாதுகாப்பில் இருப்பதாலும் ஒன்றும் செய்ய முடியாமல் திணறுகின்றனர்.
பல இடங்களில் பொட்டலமாக விற்காமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் கிடைக்கும் வகையில் பாரீன் சாக்லேட் என்ற பெயரில் சாக்லேட் ஆகவும், டம்மி சிகரெட் என்ற பெயரில் விதவிதமான கலர் பேப்பரை சிகரெட் வடிவில் சுருட்டி கஞ்சாவை விற்கின்றனர்.- நமது நிருபர் -
பங்களாதேசிகளை உள்ளே விட்டால் என்னாகும் /