மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
06-Sep-2024
விழுப்புரம் ; தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். பிரசார செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பாரி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மகளிரணி செயலாளர் சாரதா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் தண்டபாணி, பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் செல்லையா உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2024