உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

மயிலம்: விழுப்புரம் புத்தக கண்காட்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் புத்தக கண்காட்சியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.விழாவில் மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன், வட்டார கல்வி அலுவலர்கள் கோவர்தனன், மதன் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !