உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை

சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை

செஞ்சி : சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி ஒன்றிய சத்துணவு மையங்களில் உதவியாளராக பணிபுரிந்து வரும் 34 பெண்களுக்கு சமையலர் பதவி உயர்வுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். சத்துணவு மேலாளர் குமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பணி ஆணையை வழங்கி பேசினார். ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, காஞ்சனா, சசிகலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ