| ADDED : ஆக 16, 2024 06:28 AM
மயிலம்: மயிலம், பாளைய வீதியில் உள்ள ரேஷன் கடை எண்.1ல் 800க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் பொருட்களை வாங்க முடியவில்லை. இதனால், சன்னதி வீதியில் தனி ரேஷன் கடை அமைத்து பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனை கண்டித்து, நேற்று மாலை 3:00 மணியளவில் அப்பகுதி மக்கள், ரேஷன் கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் உஷாராணி, துணை தாசில்தார் காமாட்சி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.