உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே மேம்பாலம் மூடல்: போக்குவரத்து மாற்றம் விழுப்புரத்தில் மக்கள் தவிப்பு

ரயில்வே மேம்பாலம் மூடல்: போக்குவரத்து மாற்றம் விழுப்புரத்தில் மக்கள் தவிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிக்காக, ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டு, போக்குவரத்தை மாற்றி விடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.விழுப்புரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 23.50 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று ரயில் நிலையத்தில் உள்ள பழைய நடைபாதை மேம்பாலத்தை அகற்றம் பணியும், உயர் மின்னழுத்த கம்பங்கள் மாற்றும் பணி நடந்தது. அதனையொட்டி விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டது.காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மேம்பாலத்தின் இருபுறமும் ரயில்வே போலீசார் தடுப்பு கட்டை வைத்து மூடி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இவ்வழியே வந்த இரு சங்கர வாகனங்களை ரயில் நிலையம் வழியாகவும், நான்கு சக்கர வாகனங்கள் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் வழியாகவும் திருப்பி விடப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.விழுப்புரம்-புதுச்சேரி-கடலுார் வழித்தட பஸ்கள் முண்டியம்பாக்கம், பனையபுரம் வழியாகவும் மற்றும் விழுப்புரம் - நாகை சாலையில் வாணியம்பாளையம் வழியாக இயக்கப்பட்டன.

இந்த சீரமைப்பு பணி நாளை 2ம் தேதி நடைபெற உள்ளதால் அன்று மதியம் 1:00 மணி முதல் 2:00 மணிவரையிலும், மாலை 4:00 மணி முதல் 5:00 வரையிலும் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !