உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் மழை மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் மழை மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரத்தில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.விழுப்புரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு மற்றும் அதிகாலையில் பனிப் பொழிவும், பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு மேல் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்றோடு மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை 10 நிமிடங்கள் வரை நீடித்தது.இதே போன்று, செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை விட்டு விட்டு லேசான மழை பெய்தது. மாலை 4:30 முப்பது மணிக்கு துவங்கி 30 நிமிடம் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. குளிர்ந்த காற்று விசியது. கடந்த சில தினங்களாக வாட்டி எடுத்த வெயிலால் அவதிக்கப்பட்ட மக்கள் குளிர்ந்த காற்று வீசியதால் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை