மேலும் செய்திகள்
செப். 5 ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
02-Sep-2024
விழுப்புரம் : ரேஷன் கடை பணியாளர்கள் நாளை 5ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சம்பத் கூறியதாவது:சரியான எடையில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொட்டலங்களாக, நுாறு சதவீதத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். பாமாயில், துவரம் பருப்பை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பணியாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, சங்கம் சார்பில் நாளை 5ம் தேதி மாநிலம் முழுதும் முழு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு சம்பத் அவர் கூறினார்.
02-Sep-2024