மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
21 hour(s) ago
நாளை மின்தடை
21 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
21 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
21 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் விதிமுறைகளைக் காட்டி, ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதைத் தடுக்க கூடாதென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை, விழுப்புரத்தில் கலெக்டர் பழனியை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தொடங்கி ஏரி, குளம் ஆகிய இடங்களில் விவசாயிகளின் தேவைக்காக வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும். தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, வண்டல் மண் எடுப்பதை தடை செய்யக்கூடாது.வரும் மழை காலங்களுக்குள் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கலெக்டர் பழனி, இதுதொடர்பாக அரசாணை வந்ததும், மாவட்டத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago