மேலும் செய்திகள்
கம்யூ., மாவட்ட குழு கூட்டம்
08-Feb-2025
விழுப்புரம்; தமிழகத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் சகாதேவன், துணை செயலாளர் பூவை ஆறு நோக்க உரையாற்றினர்.மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், கஜேந்திரன், திருநாவுக்கரசு, கோபிநாதன், மனோ, விஜயன்தாஸ், ரஞ்சித் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டியும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்தப்பட்டது. துணை செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
08-Feb-2025