மேலும் செய்திகள்
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
02-Feb-2025
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, விருத்தகிரி கல்வி அறக்கட்டளைத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கோலியனுார் முன்னாள் சேர்மேன் விஜயா, வாரியார் இலக்கிய பேரவை தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர். தாளாளர் தேன்மொழி ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் வாசுகி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். டாக்டர் வித்யாதேவி, முகையூர் வட்டாரக் கல்வி அலுவலர் அஞ்சலை தேவி வாழ்த்திப் பேசினார். மேலாளர் செல்லம்மாள் ஆண்டறிக்கை வசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை ஆர்த்தீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இளம்சேவகர் ஜெயக்குமார், ஐ.டி.ஐ., முதல்வர் நுார்முகமது, பள்ளி மேலாளர் மஞ்சுளா, பயிற்சி அலுவலர்கள் குமரேசன், இளஞ்செழியன், ஆனந்தராஜ், சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். கல்வி நிறுவன அறங்காவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
02-Feb-2025