உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சிவராத்திரி விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த செத்தவரை, மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் 2:00 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் சிறப்பு வேள்வியும், 6:00 மணிக்கு கைலாய வாயில் திறப்பும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவ வாத்தியங்கள் முழங்க, முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து சிவஜோதி மோன சித்தரின் அருளுரையும், இரவு 11:00 மணி மற்றும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 6:00 மணிக்கு கோபூஜையும் நடந்தது.விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும், புதுச்சேரி, சென்னை, கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ