உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கூழாங்கற்கள்... கடத்தல்: தலக்காணிகுப்பம் மக்கள் கடும் எதிர்ப்பு

அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கூழாங்கற்கள்... கடத்தல்: தலக்காணிகுப்பம் மக்கள் கடும் எதிர்ப்பு

மரக்காணம்: மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த கூழாங்கற்களை இரவு நேரத்தில் கடத்தி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, வானுார் தாலுகா, மாத்துார் ஆகிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு அனுமதியின்றிசிலர் அதிகாரிகளை சரிகட்டி கூழாங்கற்கள் குவாரி நடத்தி வந்தனர்.இங்கு இரவு நேரத்தில் கூழாங்கற்களை சேகரித்து புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளுக்கு டாரஸ் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். ஆழ்துளை கிணறு, சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல், மீன் தொட்டி, சுவர் அலங்காரம் போன்றவை களுக்கு கூழாங்கற்களை அதிகளவு பயன் படுத்த தொடங்கியதால் கூழாங்கற்களின் தேவை அதிகரித்தது. இதனால் கூழாங்கற் களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அதிகளவு கூழாங்கற்களை சமூக விரோதிகள் இரவும், பகலும் எடுக்க ஆரம்பித்தனர். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைய தொடங்கி குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்தாண்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கீழ்புத்துப்பட்டு, மாத்துார் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கூழாங்கற் கள் குவாரிகளை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பகுதியில் இனிமேல் கூழாங்கற்கள் எடுக்கமுடியாது என சமூக விரோதிகள் முடிவு செய்து வேறு இடத்திற்கு புலம் பெயர்ந்தனர். இந்நிலையில் வானுார் தாலுகாவிற்கு உட்பட்ட தலக்காணிக்குப்பத்திலகூழாங்கற்கள் குவாரி அமைக்க கடந்தாண்டு மூன்று ஏக்கர் நிலம் அரசிடம் அனுமதி பெறப் பட்டது. ஆனால் அரசு அனுமதியை மீறி ஐந்து ஏக்கருக்கு மேல் கூழாங்கற் களை எடுத்துள்ளனர். மேலும் அனுமதி முடிந்த பின்னும் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் வருவாய்துறை, காவல்துறையினரை சரிகட்டி மக்களிடம் அனுமதி இருப்பதாக கூறி கூழாங்கற்களை எடுத்து இரவு நேரத்தில் கடத்தி வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்துறை, காவல்துறையிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டும், காணாமலும் இருந்து வந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியதின் பேரில் கடந்த வாரம் திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் அதிரடி உத்தரவின் பேரில் தனிப்படை எஸ்.ஐ., தமிழ் தலைமையிலான போலீசார் இரவு நேரத்தில் தலக்காணிகுப்பம் பகுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது இரண்டு டாரஸ் லாரிகளில் பல லட்சம் மதிப்பிலான கூழாங்கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதனையெடுத்து டாரஸ் லாரி டிரைவர் இருவரை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி கூழாங்கற்கள் குவாரி நடத்தி, கடத்த லில் ஈடுபட்டு தலைமறை வாகிய புதுச்சேரி மாநிலம், கனகசெட்டிகுளத்தை சேர்ந்த பழனி, கடலுார் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் ஒத்துழைப்புடன் தலைமறைவாக உள்ளவர்கள் இரவு நேரத்தில் வந்து தலக்காணிக்குப்பத்தில் பதுக்கிவைத்திருந்த கூழாங்கற்களை கடத்தி, வேறு இடத்தில் பதுக்கிவைப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு உடந்தை யாக செயல்படும் அதிகாரிகள் மீதும் கூழாங்கற்கள் கடத்த லில் தொடர்ந்து ஈடுபடுபவர் களை தடுப்பு காவலில் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இது குறித்து நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த போவதாக தலைக் காணிக்குப்பம் பொது மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை