உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு கூட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் வரவேற்றார்.மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். தேசிய தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் லெனின், மாநில செயலாளர்கள் அஷ்ரப் அலி, உதயகுமார், சிவா, மாநில பொருளாளர் சந்தோஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., லதா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி, மாநில முழுதும் வரும் 22ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை