மேலும் செய்திகள்
வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.25க்கு பச்சை பட்டாணி
10-Feb-2025
வானுார் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை ஆணையின்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய பசுமை படையின் சார்பில், தேசிய பசுமைப்படை மாணவர்கள், ஆரோவில் தாவரவியல் பூங்காவிற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் வந்த அந்த குழுவினரை தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் வரவேற்றனர்.அத்தியந்தல் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், கூவனுார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மூரார்பாளையம் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வரவேற்றார். முகாமில் 5 பள்ளிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவை பார்வையிட்டனர்.ஆரோவில் தாவரவியல் பூங்கா சத்தியமூர்த்தி, மாணவர்களுக்கு பூங்காவில் அமைந்துள்ள பாரம்பரிய தாவரங்கள் குறித்தும், அவற் றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கள் சுரேஷ், ஆசிரியர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.
10-Feb-2025