உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தை, தாய் இறந்த நிலையில் தேர்வெழுதிய மாணவிகள்

தந்தை, தாய் இறந்த நிலையில் தேர்வெழுதிய மாணவிகள்

விழுப்புரம், ; விழுப்புரம் தேர்வு மையத்தில், தந்தை மற்றும் தாய் இறந்த நிலையில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 மாணவிகள் தேர்வு எழுதினர்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.தந்தை இறந்த நிலையிலும் அவரது மகள் ரித்திகா, தான் படித்து வரும் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்தார். மிகுந்த சோகத்துடன் இருந்த அவருக்கு ஆசிரியைகள் ஆறுதல் கூறி தேர்வெழுத அனுப்பினர்.இதே பள்ளியில் பயின்று வரும் முகையூரைச் சேர்ந்த மாணவி மகிமை ஆசானியின் தாய் அமலமேரி, கடந்த பிப்ரவரி 26ம் தேதியும், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி நுார்ஜஹானின் தந்தை ஜான்பாட்ஷா பிப்ரவரி 27ம் தேதியும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர். இவ்விரு மாணவிகளும் தேர்வெழுத வந்தனர். இவர்கள் இருவருக்கும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறி, தேர்வுக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul. K
மார் 04, 2025 14:12

மாணவமணிகளே கல்வி ஒன்றே உங்களிடமிருந்து யாராலும் பிரிக்கமுடியாதது. நீங்கள் கற்கும் மேன்மையான கல்வியும் அதன்மூலம் சமூகத்திற்கு செய்யும் சேவையுமே உங்கள் பெற்றோருக்கு சமர்ப்பணம்


சமீபத்திய செய்தி