| ADDED : ஜூலை 30, 2024 11:45 PM
விழுப்புரம் : தீயால் கரும்பு சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையில் அளித்த மனு:கண்டமங்கலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் சிவப்பிரகாசம், ஸ்ரீதர் ஆகியோர் கரும்பு நிலத்தில் காற்று வீசியதால் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனால், 8 ஏக்கர் கரும்பு எரிந்ததோடு, அங்கு கரும்பு ஏற்றி கொண்டிருந்த 4 டிரெய்லர்களும் எரிந்து சேதமானது.இதற்கு ஆலையார் மற்றும் அரசு பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். இது மட்டுமின்றி, தீயணைப்புத் துறையினர் தீயில் சேதமான கரும்புகளை அணைக்க ஒரு வாகனம் மட்டும் வந்து தண்ணீர் தீர்ந்ததால் நெருப்பை அணைக்க முடியாமல் சென்றனர்.இந்த நிலை மேலும் நீடிக்காமல், போதுமான தீயணைப்பு வாகனங்கள் தீ சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.