மானிய விலையில் கோழி குஞ்சுகள் வழங்கல்
செஞ்சி ' செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களுக்கு 50 சதவீதம் மானிய விலையில் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் தலைமை தங்கினார். கால்நடைத் துறை உதவி இயக்குனர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் மணிபாரதி வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றியம் முழுதும் 100 பெண்களுக்கு தலா 40 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.கால்நடை உதவி மருத்துவர்கள் பரத், செல்வராஜ், நிவேதா, உதவியாளர் சரோஜா, தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் அய்யாதுரை, இக்பால், மதியழகன், தொண்டரணி பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதே போல் சத்தியமங்கலம், கணக்கன்குப்பம், நல்லான் பிள்ளை பெற்றாள், ஒட்டம்பட்டு, அனந்தபுரம் கால்நடை மருத்துவமனைகளின் கீழ் உள்ள கிராம பயனாளிகளுக்கும் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது.