உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

திண்டிவனம்: திண்டிவனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம், செஞ்சிரோடு காந்தி நகரில் வசிக்கும் அய்யனார் மகன் அப்பு, 23; இவர் நேற்று மாலை அதே பகுதியிலுள்ள காலி பிளாட்டில் மயங்கி கிடந்துள்ளார்.உடனே அவரது நண்பர்கள் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்பு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அப்பு போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது இறப்பிற்கு காரணமா என்று தெரியவில்லை. அப்புவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்புவின் தாயார் சுகுணா புகாரின் பேரில் ரோஷணை போலீசார் அப்பு இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ