உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

செஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

செஞ்சி: செஞ்சி தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. செஞ்சி தொகுதியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு திருத்த பணியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான முகாம்களை நடத்தவும் உள்ளனர். இந்த பணிகளை செய்ய உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செஞ்சி வட்டார வளமையத்தில் நடந்தது. செஞ்சி தாசில்தார் ஏழுமலை தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு உதவியாளர் சரவணன் வரவேற்றார். திண்டிவனம் கணினி தரவு ஆப்ரேட்டர் ராமஜெயம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் திருத்த பணியின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கினார். இதில் ஆர்.ஐ., சத்யா, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், இல்லம் தேடி கல்வி, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை