மேலும் செய்திகள்
திண்டிவனம் அருகே வீடு புகுந்து திருடியவர் கைது
06-Aug-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோவலில் நேற்று முன்தினம் இரவு திருவிழா நடந்தது. அப்போது அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த சம்பத் மகன் பாலா (எ) பவுல்மோசஸ், 22; என்பவர் போதையில் திருவிழா நடந்த இடத்தை பைக்கில் வேகமாக கடந்துள்ளார். அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் பாலாவை திட்டி அனுப்பினர்.இதை தொடர்ந்து பாலா பெரப்பேரிக்கு சென்று ஆட்களை அழைத்து வந்து மீண்டும் தகராறு செய்தார். இதில் பாலா தரப்பினர் கத்தியால் வெட்டியதில் கோவிந்தாபுரத்தை சேர்ந்த கார்த்திக், 20; ஸ்ரீகாந்த், 24; ஆகியோர் படு காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில், பவுல்மோசஸ், அரவிந்த், ஆகாஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, 18 வயது மற்றும் 16 வயதுடைய இருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
06-Aug-2024