மேலும் செய்திகள்
பதக்கங்களை குவித்த கடலுார் கல்லுாரி மாணவர்கள்
01-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் வென்ற மாணவரை கல்லுாரி நிர்வாகிகள் பாராட்டினர்.பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் பகுதியில் கடந்த பிப்., 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை அகில இந்திய பல்கலைக்கழகம் அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஜூடோ போட்டியில், திருவள்ளூவர் பல்கலை., சார்பில் விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மாணவர்கள் ரோஷன், சிவக்குமார், தீபக், லோகேஷ், பிரவீன்குமார், பவதாரணி, சர்மிளா ஆகியோர் பங்கேற்றனர். மாணவர் ரோஷன் 90 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்று, கல்லுாரிக்கு பெருமை சேர்த்தார். இவர், மண்டலங்களுக்கு இடையே நடந்த ஜீடோ போட்டியில் முதலிடம் பெற்றவர். மாணவர் ரோஷன் மற்றும் பங்கேற்ற மாணவர்களை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா ஆகியோர் பாராட்டினர்.
01-Aug-2024