உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம், கொத்தாம்பாக்கம் நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு கொத்தாம்பாக்கம் ஊராட்சி தலைவர் கவிதா குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வி சுந்தரமூர்த்தி, ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி பாஸ்கர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி திட்ட விளக்கவுரையாற்றினார். சுகாதார மேற்பார்வையாளர் முருகன் வரவேற்றார்.கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் குத்துவிளக்கேற்றி, முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கினார்.புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து, மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சத்ரபதி, ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியன், வட்டார ஆத்மா தலைவர் குமணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமதாஸ், முகாம் ஒருங்கிணைப்பளர் ரகுமான்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.சுகாதார ஆய்வாளர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை