உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கலால் அதிகாரிகள் வாகன சோதனை

கலால் அதிகாரிகள் வாகன சோதனை

வானுார்: வானுார் அடுத்த பட்டானுார் சோதனைச்சாவடியில், கலால் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் பட்டானுார் சோதனைச்சாவடியில், கலால் உதவி ஆணையர் முருகேசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்களை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, திண்டிவனம் கோட்டக்கலால் அலுவலர் கோவர்தனன், வருவாய் ஆய்வாளர்கள் தஸ்தகீர், விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை