உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் புத்தக திருவிழா நிறைவு பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வம்

விழுப்புரம் புத்தக திருவிழா நிறைவு பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த புத்தக திருவிழா நிறைவு நாளில், ஏராளமான மாணவர்கள், பொது மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.மாவட்ட நிர்வாகம் சார்பில், 3ம் ஆண்டு புத்தக திருவிழா, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. புத்தக திருவிழா கடந்த 11 நாட்களாக தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடந்தது. இதில், பல்வேறு நிறுவனங்களின் 100 புத்தக அரங்குகள், துறைசார்ந்த அரங்குகள், உள்ளூர் படைப்பாளிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டது.இதனுடன், தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வாசிப்புத்திறனை மேம்படுத்திட பெருந்திரள் வாசிப்பு, பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் கல்வி நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உரைநிகழ்வுகள், பல்வேறு தனித்திறன் போட்டிகளும் நடைபெற்றன.புத்தக திருவிழா நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று மாலை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. நாட்டுப்புற கலைஞர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சாளரின் சொற்பொழிவும் நடந்தது.புத்தக அரங்கில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு, கடைசி நாளில் புத்தகங்களை வாங்கி சென்றனர். எனினும், திடீரென கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால், மாலை நேரத்தில் புத்தக கண்காட்சி அரங்கில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை