உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலத்திட்ட உதவிகள்: அ.தி.மு.க., வழங்கல்

நலத்திட்ட உதவிகள்: அ.தி.மு.க., வழங்கல்

மரக்காணம்: ரக்காணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு சிறுவாடியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.சிறுவாடி, முருக்கேரி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு தையல் மெஷின், காஸ் அடுப்பு, புடவை, விவசாய பொருட்கள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கினார்.திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் வரவேற்றார்.கீழ்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். வடகோட்டிப்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகுமார், ஒன்றிய இளக்கிய அணி செயலாளர் அரிவுகரசு, கிளைச் செயலாளர்கள் கிருஷ்ணன், சுரேஷ், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை