நலத்திட்ட உதவி வழங்கல்
மயிலம் : மயிலம் அடுத்த தீவனுாரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். ஓன்றிய சேர்மன் யோகேஸ்வரி வரவேற்றாார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் சேகர், பொருளாளர் ரமணன் வாழ்த்திப் பேசினார்.மாவட்ட பிரதிநிதி சேகர், விவசாய அணி பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பரிதா சம்சுதீன், செல்வகுமார், சாந்தகுமார், கிஷோர், உமா ஞானசேகர், சரசு முருகன், உதயவாணன், ரமேஷ், அன்புசேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், பிரபு உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.