உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நேரு வீதியில் பழுதான மின்கம்பம் சீர் செய்யப்படுமா?

திண்டிவனம் நேரு வீதியில் பழுதான மின்கம்பம் சீர் செய்யப்படுமா?

திண்டிவனம்: திண்டிவனம் நேரு வீதியில் இடிந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை சீர் செய்வதற்கு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் நேரு வீதி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இதில் வணிக நிறுவனங்கள், தாலுகா அலுவலகம், வங்கிகள் நிறைந்துள்ள பகுதியாகும்.இதில் தாலுகா அலுவலகம் அருகிலுள்ள ஆர்.எஸ்.பிள்ளை சந்திப்பிற்கு அருகிலுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி செரித்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அங்குள்ள கடைக்காரர்கள் சார்பில் மின்துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதற்குள், மின்துறையினர் பழுதடைந்துள்ள மின்கம்பத்தை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ