உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலம் கட்டுவதற்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பாலம் கட்டுவதற்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திண்டிவனம்: திண்டிவனத்தில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு தடையாக உள்ள கிடங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியிலுள்ள தரைப்பாலம், பெஞ்சல் புயலின் போது அடித்து செல்லப்பட்டது. இதனால் கிடங்கல் பகுதிக்கு பொது மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப்பகுதியில் தற்காலிகமாக மண் கொட்டி பாலம் அமைக்கப்பட்டது.இதற்கிடையே நகராட்சி சார்பில் 1.32 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. உயர்மட்ட பாலம் கட்டும் பகுதியில், இரண்டு பக்கமும் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால், பாலம் கட்டும் பணிக்கு தடை ஏற்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் ரயில்வே பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் ரயில்வே நிர்வாகம் அகற்றவில்லை.இதன் காரணமாக, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்திற்கு முக்கியமான உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் போலீஸ் துணையுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உயர்மட்ட பாலம் குறித்த காலத்திற்குள் கட்டுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை