மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கூட்டம்
16-Feb-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மாவட்ட சமூக நலத்துறை, காவல் துறை, அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் ஜெயபுரம் ரவுண்டானாவிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், டி.எஸ்.பி., பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.ஊர்வலத்தில், மைய சட்ட ஆலோசகர் சீனு பெருமாள், சமூக நல பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்சீலா, சமூக நல பெண்கள் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஜலட்சுமி, மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து அப்போலோ சமுதாய கல்லுாரியின் மாணவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தொடர்பாக நாடகம் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
16-Feb-2025