உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பவ்டா  கல்லுாரியில் பயிலரங்கம்

பவ்டா  கல்லுாரியில் பயிலரங்கம்

மயிலம்: மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பெண்ணுரிமை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். பவ்டா நிறுவன நிர்வாகி அல்பின ஜாஸ் முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் சேகர் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக பெண்கள் ஆய்வு மையம் பேராசிரியர் கமலவேணி, யுனைடெட் கிங்டம் நிறுவன உதவி பேராசிரியர் ரீட்டா கோயல், பவ்டா திட்ட அறிக்கை தயாரிப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் பெண்ணுரிமை, பெண் அதிகாரங்கள் குறித்து உரையாற்றினர். உதவி பேராசிரியர்கள் ராமமூர்த்தி, பாலகணேஷ் வாழ்திப் பேசினர். நிகழ்ச்சியை தமாசியன் ஒருங்கிணைத்தார். மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !